“பருவநிலை நெருக்கடி என்பது ஒரு குழந்தை உரிமைகள் நெருக்கடி : குழந்தைகளின் பருவநிலை இடர்க் குறியீட்டினை அறிமுகப்படுத்துதல் (The Climate Crisis Is a Child Rights Crisis: Introducing the Children’s Climate Risk Index)” எனும் அறிக்கையினை யுனிசெஃப் வெளியிட்டுள்ளது.
இக்குறியீடானது புயல் மற்றும் வெப்பக்காற்று போன்ற பருவநிலை மற்றும் சுற்றுச் சூழல் இடர்களில் குழந்தைகளின் வெளிப்பாட்டின் அடிப்படையில் நாடுகளைத் தரநிலைப் படுத்துகிறது.
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா உள்ளிட்ட நான்கு தெற்காசிய நாடுகளில் உள்ள குழந்தைகள் பருவநிலை நெருக்கடியில் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ளனர்.
இவை முறையே 14, 15, 25 மற்றும் 26வது இடங்களில் உள்ளன.
இக்குறியீடானது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சமூக-பொருளாதார ரீதியில் பாதகமான விளைவுகள் ஏற்பட வழி வகுப்பதோடு, மீண்டும் மீண்டும் உருவாகி வரும் சுற்றுச்சூழல் இடர்களாக உள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் காற்று மாசுபாடு போன்றவற்றுடன் கூடிய 33 மிக அதிக இடர் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவை வைத்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் மிகவும் மாசுபட்ட காற்றுடைய உலகின் 30 நகரங்களுள் 21 நகரங்கள் இந்தியாவில் இருந்தன.