கோவிட்-19 தொற்றுநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குப் பலனளிக்கும் வகையில் குழந்தைகளுக்கான PM CARES திட்டத்தினைப் பிரதமர் அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், அடிப்படைத் தேவைகளுக்கு மாதம் 4,000 ரூபாய் உதவித் தொகை, பள்ளிப் படிப்புக்கான நிதியுதவி, உயர்கல்விக்கான உதவித்தொகை மற்றும் ரூ. 5 லட்சம் வரையிலான இலவசச் சிகிச்சை போன்றவை அளிக்கப்படும்.
கோவிட்-19 தொற்றுநோயால் பெற்றோரை இழந்த 18 முதல் 23 வயதுடைய இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.
அதோடு அவர்கள் 23 வயதினை எட்டும் போது அவர்களுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும்.
5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைக்கான இலவசச் சிகிச்சை வசதியைப் பெற, குழந்தைகளுக்கு ‘குழந்தைகளுக்கான PM CARES திட்டத்தின்’ மூலம் ஆயுஷ்மான் சுகாதார அட்டை வழங்கப்படும்.