குழந்தைகளுக்கான சமூக ஊடகக் கட்டுப்பாடு - இந்தோனேசியா
March 9 , 2026 149 days 200 0
புதிய விதிமுறை மூலம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடக அணுகலுக்கான கட்டுப்பாடுகளை இந்தோனேசியா அறிவித்துள்ளது.
சிறார்களுக்கான இணைய மிரட்டல், அடிமையாதல் மற்றும் இணையதள அபாயங்களைக் குறைக்க இந்த விதி பிறப்பிக்கப்பட்டது.
டிக்டாக், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ரோப்லாக்ஸ் போன்ற தளங்களில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகள் மார்ச் 28, 2026 முதல் படிப்படியாக முடக்கப்படும்.
ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளும் சிறார்களுக்கு இதே போன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
மலேசியா 2026 ஆம் ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு சமூக ஊடகத் தடையை அறிவித்துள்ளது.