TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

October 3 , 2025 21 days 50 0
  • தேசியக் குற்றப் பதிவுகள் வாரியமானது (NCRB) 2023 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1,77,335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டில் 1,62,449 ஆக பதிவானதை விட 9.2% அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • குழந்தைகளுக்கு எதிரான தேசிய அளவிலான குற்ற விகிதம் ஆனது 2023 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 39.9 ஆக அதிகரித்துள்ளது என்பதோடு இது 2022 ஆம் ஆண்டில் 36.6 ஆக இருந்தது.
  • கடத்தல் குற்றங்கள் ஆனது இந்த வழக்குகளில் 45% (79,884) பங்கினைக் கொண்டு உள்ளன.
  • பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) சட்டத்தின் கீழான குற்றங்கள் 38.2% (67,694) ஆகும்.
  • மத்தியப் பிரதேசம் (22,393 வழக்குகள்), மகாராஷ்டிரா (22,390), மற்றும் உத்தரப் பிரதேசம் (18,852) ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகின.
  • அசாமில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 84.2 என்ற விகிதத்தில் அதிகபட்ச விகிதம் பதிவாகியுள்ளது.
  • டெல்லியில் 140.3 என்ற அதிக குற்ற விகிதத்துடன் 7,769 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஒரு லட்சத்துக்கு 143.4 என்ற அதிகபட்ச விகிதம் பதிவாகியுள்ளது.
  • ஒட்டு மொத்தத் தேசியக் குற்றப் பத்திரிக்கை விகிதம் 64.3% ஆக இருந்தது என்ற நிலையில் இதில் தமிழ்நாடு (93.7%) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (91.3%) முன்னணியில் உள்ளன என்பதோடு மேலும் டெல்லி (31.7%) மற்றும் ஹரியானா (39.6%) ஆகியவற்றில் குறைந்த எண்ணிக்கையானது பதிவாகியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்