குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த லான்செட் அறிக்கை
May 11 , 2025 16 hrs 0 min 26 0
உலகளவில் சுமார் ஐந்து பெண்களில் ஒருவர் (18.9 சதவீதம்) மற்றும் ஏழு ஆண்களில் ஒருவர் (14.8 சதவீதம்) 18 வயதுக்கு முன்பே பாலியல் வன்முறையை எதிர் கொண்டு உள்ளனர்.
இந்தியாவில் 18 வயதிற்கு முற்பட்ட 30.8% சிறுமிகளும் 13% சிறுவர்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தெற்காசியாவில் பெண்களுக்கு ஏற்பட்ட மிக அதிகபட்சப் பாதிப்பு இதுவாகும்.
அமெரிக்காவில் பெண்களில் சுமார் 27.5 சதவீதமும் ஆண்களில் சுமார் 16.1 சதவீதமும்; ஐக்கியப் பேரரசில் பெண்களில் சுமார் 24.4 சதவீதமும் ஆண்களில் சுமார் 16.5 சதவீதமும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.