குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் சார்ந்த நடவடிக்கைகள்
September 30 , 2024 350 days 265 0
குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பது, பதிவிறக்கம் செய்தல், சேமித்தல், வைத்திருப்பது, பரவச் செய்தல் அல்லது காட்சிப் படுத்துதல் ஆகியவை POCSO சட்டத்தின் கீழ் குற்றம் சார்ந்த பொறுப்புக் கூறலின் கீழ் வரும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தத் தீர்ப்பு ஆனது இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு தீர்ப்பை ரத்து செய்துள்ளது.
தனிநபர் ஒருவர் "ஒரு குழந்தை அல்லது குழந்தைகளை ஆபாச நோக்கங்களுக்காக நேரடியாகப் பயன்படுத்தாத வரையில்" அத்தகையப் படங்களை "வைத்திருப்பது மட்டும்" சட்டத்தை மீறுவதாகாது என்று சென்னை உயர் நீதிமன்றம் முன்பு கூறியது.
ஆனால் உச்ச நீதிமன்றம் ஆனது ஒரு நபர் தனது ஈடுபாட்டுடன் தயாரிக்கவில்லை அல்லது பரவச் செய்யவில்லை என்றாலும், நேரடி உடைமை மட்டுமல்லாமல் அதன் "ஆக்கப் பூர்வமான உடைமையும்" POCSO சட்டத்தின் 15வது பிரிவின் கீழ் வரும் என்று முடிவு செய்தது.
ஆக்கப் பூர்வமான உடைமை என்பது ஒன்றன் கட்டுப்பாடு குறித்த தகவலோடு சேர்த்த ஒன்றின் மீதான முழுக் கட்டுப்பாடு ஆகும்.