பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் இது ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப் படுகிறது.
ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார்.
அவர் அறிவியல் மனப்பான்மையை ஊக்குவித்தார் மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் (IIT), அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (AIIMS) மற்றும் பல்கலைக் கழக மானியக் குழு (UGC) போன்ற நிறுவனங்களை உருவாக்கச் செய்வதை ஆதரித்தார்.
1946 ஆம் ஆண்டில் அவர் குறிக்கோள் தீர்மானத்தை முன்வைத்தார் என்ற நிலையில்இது அரசியலமைப்பின் அடித்தளமாக மாறியது.
அவர் The Discovery of India, Glimpses of World History மற்றும் சுயசரிதை ஆகியவற்றை எழுதினார்.
அவர் 1938 ஆம் ஆண்டில் தேசியத் திட்டமிடல் குழுவின் தலைவராக பணியாற்றினார், என்பதோடுஇந்தியாவின் ஆரம்ப கால ஐந்தாண்டுத் திட்டங்களையும் அவர் வழி நடத்தினார்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "For Every Child, Every Right" என்பதாகும்.