உள்துறை அமைச்சகமானது, மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களின் அரசுகளை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு குழந்தைகள் நல காவல் அதிகாரியை (CWPO) நியமிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
அவர்கள் பாதிக்கப்பட்ட அல்லது குற்றவாளிக் குழந்தைகளைக் கையாளச் செய்வது தொடர்பான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுவர்.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின் படி, 2020 ஆம் ஆண்டில் 1,28,531 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை ஆனது 2021 ஆம் ஆண்டில் 1,49,404 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 19,173 வழக்குகளுடன் மத்தியப் பிரதேசம் முதலிடத்திலும், 16,838 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
நாடு முழுவதும் பதிவான 1,279 வழக்குகளில் மொத்தம் 1,402 குழந்தைகள் கொலை செய்யப் பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் பதிவான 1,18,549 ஆள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் 1,15,414 வழக்குகள் குழந்தை கடத்தல் வழக்குகளாகப் பதிவாகியுள்ளன.