TNPSC Thervupettagam

குழந்தைகள் மற்றும் டிஜிட்டல் குப்பைக் கிடங்கு அறிக்கை

June 22 , 2021 1504 days 651 0
  • குழந்தைகள் மற்றும் டிஜிட்டல் குப்பைக் கிடங்கு எனத் தலைப்பிடப்பட்ட ஒரு அறிக்கையானது உலக சுகாதார அமைப்பினால் சமீபத்தில் வெளியிடப் பட்டது.

முக்கியத் தகவல்கள்

  • குறைவான மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளிலுள்ள மின்னணுக் கழிவுக் கிடங்குகளில் பணியாற்றும் 18 மில்லியனுக்கும் மேலான குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் இதன் மூலம் தீவிரமான சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும்.
  • அதிக வருமானமுடைய நாடுகளிலிருந்து கொட்டப்படும் மின்னணுக் கழிவுகளால் இந்த நாடுகள் பெரும் ஆபத்தை எதிர்கொள்கின்றன.
  • முறையான பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் இல்லாத குறைவான வருமானமுடைய நாடுகளில் இந்தக் கழிவுகளின் மீதான செயல்முறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
  • குழந்தைகள் சிறிய மற்றும் சாமர்த்தியமான கைகளை உடையவர்கள் என்பதால் இத்தகைய குப்பைக் கிடங்குகளில் வேலை செய்வதற்கு இவர்களே அதிகம் பணியமர்த்தப் படுகின்றனர்.
  • 2019 ஆம் ஆண்டில் 53.6 மில்லியன் டன் அளவிலான மின்னணுக் கழிவுகள் உருவாக்கப் பட்டன.
  • இதில் 17.4 சதவீத மின்னணுக் கழிவுகள் மட்டுமே முறையான மறுசுழற்சி மையங்களில் செயல்முறைக்கு உட்படுத்தப் படுகின்றன.
  • மீதமுள்ள கழிவுகள் முறைசாரா பணியாளர்கள் மூலம் சட்டவிரோதமாக செயல்முறைக்கு உட்படுத்துவதற்காக வேண்டி குறைவான (அ) நடுத்தர வருமானமுடைய நாடுகளில் கொட்டப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்