TNPSC Thervupettagam

குழந்தைத் திருமண முறையை ஒழித்தல்

September 27 , 2025 13 hrs 0 min 13 0
  • "Healthy Women, Empowered Families" பிரச்சாரத்தின் போது, சத்தீஸ்கரில் உள்ள சூரஜ்பூர் மாவட்ட நிர்வாகமானது 75 கிராமப் பஞ்சாயத்துகளை "குழந்தைத் திருமணம் இல்லாதவையாக" அறிவித்துள்ளது.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தப் பஞ்சாயத்துகளில் குழந்தைத் திருமண வழக்குகள் எதுவும் பதிவாகாததை அடுத்து இந்த அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் அங்கன்வாடி பணியாளர்கள், பஞ்சாயத்துப் பிரதிநிதிகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் பங்கேற்றனர்.
  • இந்த முன்னெடுப்பு ஆனது, குழந்தை உரிமைகள், தாமதமான திருமணங்கள் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்தது என்ற நிலையில் இதன் விளைவாக அந்தப் பகுதிகளில் மேம்பட்ட சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விளைவுகள் பதிவாகச் செய்தன.
  • இந்த வெற்றியானது யுனிசெஃப் அமைப்பின் ஆதரவுடன் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட மாநிலத்தின் பரந்த அளவிலான "குழந்தைத் திருமணம் இல்லாத சத்தீஸ்கர் பிரச்சாரத்துடன்" ஒன்றி வந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்