குழந்தைத் திருமணத்தைத் தடை செய்யும் சட்டத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுடெர்தே கையெழுத்திட்டார்.
பிளான் இன்டர்நேஷனல் எனப்படும் பிரிட்டனைச் சேர்ந்த உரிமைகள் அமைப்பின் கூற்றுப்படி, பிலிப்பைன்ஸ் நாடானது அதிக அளவிலான குழந்தைத் திருமண வீதத்தில் உலகிலேயே 12வது இடத்தில் உள்ளது.
2021 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் படி, தெற்காசியா மற்றும் துணை சஹாரா சார்ந்த ஆப்பிரிக்க நாடுகளில் அதிக குழந்தைத் திருமணங்கள் பதிவாகியுள்ளன.