குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக தினம் 2025 - ஜூன் 12
June 14 , 2025 71 days 108 0
இந்த ஆண்டானது குழந்தைத் தொழிலாளர் முறையின் மோசமான நிலைகள் குறித்த உடன்படிக்கையின் 26வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Progress is clear, but there’s more to do: let’s speed up efforts!' என்பதாகும்.
ஆப்பிரிக்கா இதர பிற பிராந்தியங்களுடன் ஒப்பிடும் போது குழந்தைத் தொழிலாளர் விகிதத்தில் (1/5) மற்றும் எண்ணிக்கை ரீதியாக சுமார் 72 மில்லியன் என்ற குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் அனைத்து குழந்தைத் தொழிலாளர் விகிதத்தில் 7% மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் 62 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்டு இந்த இரண்டு குறியீடுகளிலும் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியம் இரண்டாவது இடத்தில் உள்ளன.
ILO உடன்படிக்கை எண். 138 ஆனது குழந்தைத் தொழிலாளர்களின் ஒரு குறைந்தபட்ச வயதையும், ILO உடன்படிக்கை எண். 182 ஆனது குழந்தைத் தொழிலாளர்களின் மிக மோசமான நிலைகள் குறித்தும் கையாள்கிறது.