TNPSC Thervupettagam

குழந்தைப் பராமரிப்பு பெட்டகம் திட்டம்

February 18 , 2026 5 days 51 0
  • குறைந்த எடை கொண்ட குழந்தைகளிடையே குழந்தை இறப்பு விகிதத்தை (IMR) குறைக்க தமிழ்நாடு அரசு ஒரு "குழந்தை பராமரிப்பு பெட்டகம்" திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
  • இந்தத் திட்டம் இரும்புச் சத்து சொட்டு மருந்துகள், மல்டிவைட்டமின் சொட்டு மருந்துகள், வைட்டமின் டி3 சொட்டு மருந்துகள், ஒரு குழந்தை மருத்துவ அட்டை மற்றும் 12 குழந்தை வளர்ச்சி அறிகுறிகள் குறித்த ஒரு சிறு புத்தகத்தை மாதாந்திரப் பெட்டகங்களாக வழங்குகிறது.
  • அரசு மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் சுமார் 4.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன என்ற நிலையில் மேலும் சுமார் 52,000 குழந்தைகள் குறைந்த எடையுடன் (2.5 கிலோவிற்கும் குறைவாக) பிறக்கின்றன.
  • மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த முயற்சியானது சுமார் 8.07 கோடி செலவில் செயல்படுத்தப் படுகிறது.
  • தமிழ்நாட்டின் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆனது 1,000 பிறப்புகளுக்கு 8.2 (2023–24) இலிருந்து 7.7 (2024–25) ஆகக் குறைந்துள்ளது.
  • பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, நோய்த்தடுப்பு மற்றும் அதிக ஆபத்து எச்சரிக்கைகளை கண்காணிப்பதற்காக வேண்டி கர்ப்பம் மற்றும் குழந்தை கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (PICME)-க்கான கைபேசி செயலியான “தாய்மை” தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்