குழந்தையின்மை நிலவர மதிப்பீடுகள் 1990–2021 அறிக்கை
April 15 , 2023 925 days 448 0
1990 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான அனைத்துத் தொடர்புடைய மற்றும் சார்பு ஆய்வுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் குழந்தையின்மையின் உலகளாவிய மற்றும் பிராந்திய நிலவரம் பற்றிய மதிப்பீடுகளை வழங்குவதே இந்த அறிக்கையின் நோக்கமாகும்.
உலகளாவிய அளவில் வயது வந்தோர் பிரிவினரில் சுமார் 17.5 சதவீதம் பேர் குழந்தை இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் ஏறத்தாழ ஆறில் ஒருவர், தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் குழந்தையின்மை நிலையினை எதிர்கொண்டுள்ளனர்.
வாழ்நாள் முழுவதுமான கருவுறாமைப் பாதிப்பு ஆனது, உலக சுகாதார அமைப்பின் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் (23.2%) அதிகமாகவும் மற்றும் உலக சுகாதார அமைப்பின் கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் (10.7%) குறைவாகவும் இருப்பதாக தற்போதுள்ள தரவுகள் குறிப்பிடுகின்றன.
மதிப்பிடப்பட்ட காலகட்டம் சார்ந்த கருவுறாமைப் பாதிப்பு ஆனது, உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் (16.4%) அதிகமாகவும், கிழக்கு மத்தியத் தரைக் கடல் பகுதியில் குறைவாகவும் (10.0%) உள்ளது.