குழாய் வழிச் செல்லும் இயற்கை எரிவாயுவில் பசுமை ஹைட்ரஜன்
April 12 , 2022 1213 days 489 0
கவாஸ் என்னுமிடத்திலுள்ள தேசிய அனல்மின் கழகத்திற்குச் சொந்தமான குஜராத் எரிவாயு லிமிடெட் நிறுவனத்தின் குழாய்வழிச் செல்லும் இயற்கை எரிவாயுக் கட்டமைப்பில் பசுமை ஹைட்ரஜனை கலக்கும் ஒரு முயற்சியினை தேசிய அனல்மின் கழகம் மேற்கொண்டுள்ளது.
இந்த அற்புதமானத் திட்டமானது நாட்டிலேயே இதுபோன்ற முதல் முயற்சியாகும்.
இது சமையல் துறையைக் கார்பன் இல்லாத ஒரு துறையாக மாற்றி இந்தியாவினை ஆற்றல் திறனில் தன்னிறைவு அடையச் செய்வதற்கான ஒரு நடவடிக்கையாகும்.