பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் குவாட் (நான்கு) நாடுகளின் முதல் உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்த நாற்கரப் பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நாடுகளான இவை சீனாவை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்க உள்ளன.
குவாட் ஆனது ஆசிய நேட்டோ (NATO - North Atlantic Treaty Organization) எனவும் அழைக்கப் படுகிறது.
இது இந்தியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் அலுவல் சாராத யுக்தி சார் குழு ஆகும்.
‘குவாட்’ எனும் கருத்து முதன்முதலில் 2007 ஆம் ஆண்டில் முன்னாள் ஜப்பானிய பிரதமரான சின்ஷோ அபே என்பவரினால் கொண்டு வரப்பட்டது.