இந்தியா, தேசிய குவாண்டம் திட்டத்தின் கீழ் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (IIT) டெல்லி, IIT பம்பாய், IIT கான்பூர் மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், (IISc) பெங்களூரு ஆகியவற்றில் நான்கு மேம்பட்ட குவாண்டம் உருவாக்க மையங்களை அமைக்க உள்ளது.
குவாண்டம் உணர்வுக் கருவிகள், குவாண்டம் கணினி மற்றும் குவாண்டம் பொருட்களில் கவனம் செலுத்தும் இந்த மையங்கள் பாதுகாப்பான மற்றும் மேம்படுத்தக் கூடிய குவாண்டம் சாதனங்களை உருவாக்கும்.
IIT பம்பாய் மற்றும் IIT கான்பூர் குவாண்டம் உணர்வுக் கருவிகள் மற்றும் அளவியலை மேற்கொள்ளும்.
IISc பெங்களூரு மற்றும் IIT பம்பாய் மேம்பட்ட குவாண்டம் கணினி உருவாக்கத்தினை மேற்கொள்ளும்.
இந்த முன்னெடுப்பானது புதுமை, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் இந்தியா முழுவதும் குவாண்டம் வன்பொருள் நிபுணர்களின் பயிற்சியை ஊக்குவிக்கும்.
இந்த திட்டம் இந்தியாவின் தொழில்நுட்ப இறையாண்மை மற்றும் மீக்கடத்துத் திறன், ஒளியணுவியல், சுகாதாரம் மற்றும் விண்வெளி போன்ற முக்கியத் துறைகளில் உள்ளார்ந்தத் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்தும்.