வல்லநாடு புல்வாய் (Blackbuck) சரணாலயத்திற்கு அருகிலுள்ள குவாரி திட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறும், அதே நேரத்தில் புல்வாய்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டது.
கடுமையான வனவிலங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இத்திட்டத்தை மீண்டும் மறுபரிசீலனை செய்யுமாறு தமிழகத்தின் மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு (SEIAA) தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
முன்மொழியப்பட்ட கல் மற்றும் சரளைக் குவாரி சுமார் 6.02 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் சரணாலயத்திலிருந்து சுமார் 1.7–1.9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
புல்வாய் (இந்திய மறிமான்) 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை I இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது என்பதோடுஇது மிக உயர்ந்த அளவிலான சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது.
முக்கியமாக புல்வாய்களைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட இந்தச் சரணாலயம் சுமார் 16.41 சதுர கிலோமீட்டர் வறண்ட புதர்க்காடுகளை உள்ளடக்கியது.