TNPSC Thervupettagam

கூகிள் மற்றும் CCI இடையிலான வழக்கு

August 16 , 2025 15 hrs 0 min 16 0
  • தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் (NCLAT) நம்பிக்கையற்ற தீர்ப்புக்கு எதிராக கூகிள் நிறுவனம் மேற்கொண்ட மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் (SC) ஏற்றுக் கொண்டது.
  • இந்தியப் போட்டி ஆணையம் (CCI) ஆனது, கூகிள் தனது ஆதிக்கத்தினை துஷ்பிரயோகம் செய்து, செயலி உருவாக்குநர்களை 15–30% பங்குகளுடன் அதன் கணக்கிடல் முறையைப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்தியதாகவும், அதே நேரத்தில் யூடியூப் போன்ற அதன் சொந்த செயலிகளுக்கு விலக்கு அளித்ததாகவும் கண்டறிந்தது.
  • கூகிள் நிறுவனமானது, திறன் பேசித் தயாரிப்பு நிறுவனங்கள் பிளே ஸ்டோரை அணுகுவதற்கு தேடல், குரோம் மற்றும் யூடியூப் போன்ற அதன் செயலிகளை முன் கூட்டியே கைபேசிகளில் நிறுவ கட்டாயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டில், CCI கூகிளுக்கு 936.44 கோடி ரூபாய் அபராதம் விதித்ததோடு மேலும் கணக்கிடலை பிளே ஸ்டோர் அணுகலில் இருந்து பிரிக்கவும், கணக்கிடல் தரவில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும் உத்தரவிட்டது.
  • NCLAT ஆனது பின்னர் அபராதத்தை 216.69 கோடி ரூபாயாகக் குறைத்து சில நடவடிக்கைகளைக் கைவிட்டது ஆனால் கணக்கிடலில் வெளிப்படைத்தன்மை மீதான வழிமுறைகளை உறுதி செய்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்