கூகுள் கிறிஸ்துமஸ் தீவில் ஒரு செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தினை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது.
இது இந்தோனேசியாவிலிருந்து சுமார் 350 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள ஒரு ஆஸ்திரேலியப் பிரதேசமாகும்.
கிறிஸ்துமஸ் தீவை டார்வினுடன் இணைக்கும் ஒரு கடல்சார் கம்பி வட இணைப்பினை உருவாக்க ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் ஒப்புதலுக்கு கூகுள் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது என்பதோடு இது சப்காம் எனும் அமெரிக்க நிறுவனத்தினால் நிறுவப்பட உள்ளது.
ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறையானது கூகுளுடன் மூன்று ஆண்டு சேவை ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது.