கூகுள் தாய் நிறுவனமான 'ஆல்ஃபபெட் இயக்குநர்களில் ஒருவரானார் சுந்தர் பிச்சை
July 26 , 2017 3047 days 1457 0
'ஆல்ஃபபெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (Chief Executive Officer, CEO/சிஇஓ) சுந்தர்பிச்சை (45) நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்ஃபபெட் நிறுவனம் கூகுளின் தாய் நிறுவனமாகும்.
கூகுள் சிஇஓவாக மிகச் சிறப்பாக பணியாற்றி வருபவர் சுந்தர்பிச்சை. அவரது முயற்சியால் சிறந்தவளர்ச்சி, கட்டமைப்புகள், வழங்கும் சேவைகளில் புத்தாக்கம் ஆகியவற்றை கூகுள் கண்டது. கூகுள் நிறுவனத்தில்நீண்ட காலமாகப் பணி புரிந்து வரும் சுந்தர் பிச்சை, சென்னையில் பிறந்தவர் ஆவார்.