கூகுள் நிறுவனத்தின் "2022 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தேடல்கள்" அறிக்கை
December 11 , 2022 967 days 466 0
கூகுளின் பிரபலத் தேடல்களின் வருடாந்திரப் பட்டியல், 2022 ஆம் ஆண்டிற்கு வெளியிடப் பட்டுள்ளது.
வருடாந்தரத் தேடுதல் பட்டியலானது ஓர் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் பிரபலமான தேடல்களைப் பட்டியலிடுகிறது.
இந்தப் பட்டியலில் செய்திகள், பிரபலங்கள், எப்படிச் செய்ய வேண்டும், சமையல் குறிப்புகள், 'எனக்கு அருகில் உள்ள இடங்கள்' ஆகிய தேடல்கள், 'இது என்ன' ஆகியத் தேடல்கள் மற்றும் பல அதிகம் இடம் பெற்றுள்ளன.
இந்திய நாட்டின் கிரிக்கெட் லீக் போட்டியான IPL பிரபலத் தேடல்களில் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து CoWIN மற்றும் FIFA உலகக் கோப்பை ஆகியவை இடம் பெற்று உள்ளன.