கூகுள் நிறுவனத்துடன் மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்பந்தம்
February 6 , 2019 2807 days 1023 0
மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் கூகுள் நிறுவனத்துடனும் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுடனும் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்தில் இணைந்திருக்கின்றது. இந்த ஒப்பந்தம் 108 ஆம்புலன்ஸ் சேவை தேவைப்படும் இடத்தைப் பற்றிய எவ்வித தகவலும் தெரிவிக்காத போதும் அந்த இடத்திற்குச் சரியாக சென்று சேரும் சேவையை அளித்திட எண்ணுகின்றது.
இந்த சேவை கூகுள் அவசர இருப்பிட சேவைகள் மற்றும் கைபேசி முக்கோண கோபுரம் ஆகிய இரட்டைத் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி செயல்படுத்தப்படும்.
கைபேசி முக்கோண கோபுரத் தொழில்நுட்பமானது இருப்பிடத்தைப் பற்றி அறிய தொலைத் தொடர்பு சேவை வழங்குநரிடமிருந்துப் பெறப்படும் தகவலைப் பயன்படுத்துகின்றது. அதே சமயம் கூகுள் அவசர இருப்பிட சேவைகள் இருப்பிடத்தை மிகவும் துல்லியமாக அறிவதற்காக புவியிடங்காட்டி சேவையைப் பயன்படுத்துகின்றது.
இச்சேவை இணைய வசதி மற்றும் செயலி வசதி தேவைப்படாத நடைமுறையாகும். ஆகவே ஒருவரது கைபேசி இணைய வசதியைக் கொண்டிருக்காமல் இருந்தாலும் அவர் இருப்பிட சேவை அறியும் வசதியைப் பெற முடிகின்ற வகையில் இது ஒரு அனைவருக்குமான திட்டமாகும்.