பிரேசிலின் பெலெமில் நடைபெறும் COP30 மாநாட்டில், நியாயமான மற்றும் விரிவு படுத்தக் கூடிய உலகளாவியப் பருவநிலை நடவடிக்கைக்கு கூட்டுக் கடன் வழங்கும் செயல்முறை (JCM) ஒரு முக்கியமான செயற்கருவி என்பதை இந்தியா எடுத்துரைத்தது.
பாரிசு உடன்படிக்கையின் 6வது பிரிவின் கீழ் JCM தற்போது 31 கூட்டாளி நாடுகளையும் 280+ திட்டங்களையும் உள்ளடக்கியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
JCM செயல் முறையில் இந்தியாவும் ஜப்பானும் ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (MoC) கையெழுத்திட்டன.
இந்தச் செயல்முறையானது சேமிப்புடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், பசுமை அம்மோனியா, நிலையான விமான எரிபொருள் மற்றும் எஃகு மற்றும் சிமெண்ட் தொழில்துறைகளுக்கான தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளை ஆதரிக்கும்.
JCM செயல் முறைக்கான அமலாக்க விதிகளை இந்தியா தயாரித்து வருகிறது மற்றும் இந்தியக் கார்பன் சந்தை வலை தளத்தில் ஒரு பிரத்தியேகமான பிரிவை உருவாக்கி வருகிறது.