இந்திய விமானப் படையானது ராயல் ஏர் ஃபோர்ஸ் ஓமன் (ராஃபோ) உடன் EX EASTERN BRIDGE-V என பெயரிடப்பட்ட இருதரப்பு கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கிறது.இது 2019 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தின் 17-26 தேதிகளில் ஓமனின் விமானப் படை தளமான மசிராவில் நடத்தப் பட இருக்கின்றது.
கடைசிப் பயிற்சியான EX EASTERN BRIDGE-IV என்பது 2017 ஆம் ஆண்டில் ஜாம்நகரில் நடத்தப் பட்டது.
முதல் முறையாக, மிக் -29 போர் விமானம் இந்தியாவுக்கு வெளியே ஒரு சர்வதேசப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளது.
மிக் -29 மற்றும் சி -17 விமானங்களைப் பயிற்சியில் பங்கேற்கும் இந்திய விமானப் படை கொண்டுள்ளது.
மிக் -29 ஆனது ராயல் ஏர் ஃபோர்ஸ் ஓமானின் யூரோஃபைட்டர் டைபூன், எஃப் -16 மற்றும் ஹாக் உடன் இணைந்து பயிற்சி பெறும்.