கூட்டுறவு வங்கி விரிவாக்கத்திற்கான புதிய விதிமுறைகள்
August 2 , 2025 14 hrs 0 min 13 0
தற்போதுள்ள நிதி ரீதியாக வலுவான மற்றும் நன்கு நிர்வகிக்கப்பட்ட (FSWM) விதிகளை மாற்றுவதற்காக வணிக அங்கீகாரத்திற்கான தகுதி அளவுருக்களை (ECBA) இந்திய ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது.
நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளின் (UCB) புதிய கிளைகள், ATM மற்றும் அதன் உள்கட்டமைப்புக்கான ஒப்புதல்களை ECBA நிர்வகிக்கும்.
வங்கிகள் கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் இருந்த போதுமான மூலதனத் தன்மை, வங்கி இருப்பு / சொத்துத் தரம் மற்றும் இலாபத்தைக் காட்டுவதற்கான பல்வேறு விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
வங்கிகளின் நிகர வாராக் கடன்கள் (NPA) மூன்று சதவீதத்தை தாண்டக் கூடாது.
வங்கிகள் தேவையான பண கையிருப்பு விகிதம் (CRR) மற்றும் சட்டப்பூர்வ பணப் புழக்க விகிதம் (SLR) ஆகியவற்றைத் தவறாமல் பேணியிருக்க வேண்டும்.
ECBA செல்லுபடியாகும் காலம் அடுத்த நிதியாண்டின் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.