TNPSC Thervupettagam

கூண்டில் வளர்க்கப்பட்ட மெலிந்த அலகுடைய கழுகுகள் (slender-billed vultures) விடுவிப்பு

August 16 , 2026 3 days 32 0
  • அசாம், உலகிலேயே முதன்முறையாக கூண்டில் வளர்க்கப்பட்ட மெல்லிய அலகு கழுகுகளை (ஜிப்ஸ் டெனுயிரோஸ்ட்ரிஸ்) விடுவித்துள்ளது.
  • அசாமில் உள்ள பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் (BNHS) பாதுகாப்பு மையத்தில் கூண்டில் வளர்க்கப்பட்ட ஐந்து மெல்லிய அலகு கழுகுகள் விடுவிக்கப் பட்டன.
  • இவை, காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தின் பிஸ்வநாத் பிரிவில் உள்ள ஜடாயு மென் விடுவிப்பு மையத்தில் விடுவிக்கப்பட்டன.
  • கால்நடை வலி நிவாரணிகளின் பயன்பாடு காரணமாக, கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் ஜிப்ஸ் கழுகுகளின் எண்ணிக்கை 99% குறைந்துள்ளது.
  • டிக்ளோஃபெனாக், அசெக்ளோஃபெனாக், கீட்டோபுரோஃபென் மற்றும் நிமெசுலைடு ஆகிய நான்கு மருந்துகளை மத்திய அரசு தடை செய்திருந்தாலும், பூச்சிக்கொல்லி நச்சுத்தன்மை அசாமில் உள்ள கழுகுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது.
  • மெல்லிய அலகு கழுகு என்பது துணை-இமயமலைப் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு பழைய உலகக் கழுகு இனமாகும்.
  • இந்தியத் துணைக்கண்டத்தில் இதன் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதால், 2002 ஆம் ஆண்டு முதல் இது மிக அருகி வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இது முன்னர் "நீண்ட அலகு கழுகு" என்ற பெயரில் இந்தியக் கழுகு என்றும் அழைக்கப் பட்டது.
  • ஆனால், இந்தியக் கழுகு கங்கைக்குத் தெற்கே மட்டுமே காணப்படுகிறது மற்றும் செங்குத்துப் பாறைகளில் இனப்பெருக்கம் செய்கிறது, அதே சமயம் மெல்லிய அலகு கழுகு சாலையோரம் காணப்படுகிறது மற்றும் மரங்களில் கூடு கட்டுகிறது.
  • மெல்லிய அலகு கழுகு இந்தியாவில் வடக்கே கங்கைச் சமவெளி, மேற்கே இமாச்சலப் பிரதேசம், தெற்கே வடக்கு ஒடிசா வரை, மற்றும் கிழக்கே அசாம் வரை காணப் படுகிறது.
  • அவை பொதுவாக ஓரிடத்திலேயே தங்கும் பறவைகள்; அவை நீண்ட தூரம் பயணம் செய்வதோ அல்லது எந்தக் காரணத்திற்காகவும் வலசை போவதோ இல்லை.
  • 1883-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் (BNHS), இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மிகப்பெரிய அரசு சாரா அமைப்புகளில் ஒன்றாகும்.
  • ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு என்பது, பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தால் வெட்லண்ட்ஸ் இன்டர்நேஷனல் அமைப்புடன் இணைந்து இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஒரு வருடாந்திரப் பணியாகும்.
  • இந்தப் பணி, 'சர்வதேச நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு' என்ற சர்வதேசப் பணியின் ஒரு பகுதியாகும்.
  • BNHS, இந்தியாவில் பேர்ட்லைஃப் இன்டர்நேஷனல் அமைப்பின் பங்குதாரராகும்.
  • பேர்ட்லைஃப் இன்டர்நேஷனல் என்பது பறவைகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்கப் பாடுபடும் அரசு சாரா அமைப்புகளின் ஒரு உலகளாவிய கூட்டமைப்பாகும்.
  • இது, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) பறவைகளுக்கான செம்பட்டியல் அதிகார அமைப்பாகும்.
  • பேர்ட்லைஃப் இன்டர்நேஷனல், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் பசிபிக் ஆகிய பகுதிகளில் ஒன்பது பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
  • அவற்றில் முக்கியமான பறவை மற்றும் பல்லுயிர் பகுதிகள் திட்டம், கடல்சார் திட்டம், அழிவுகளைத் தடுக்கும் திட்டம் மற்றும் பறவைப் பாதைகள் திட்டம் ஆகியவை அடங்கும்.
  • வெட்லண்ட்ஸ் இன்டர்நேஷனல் என்பது, மக்கள் மற்றும் பல்லுயிர்களுக்காக ஈரநிலங்களையும் அவற்றின் வளங்களையும் பேணிப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் செயல்படும் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.
  • இது உலகெங்கிலும் உள்ள அரசாங்க மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர் ஆதரவுடன் இயங்கும் ஒரு சுதந்திரமான, இலாப நோக்கற்ற, உலகளாவிய அமைப்பு ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்