இந்திய அரசானது 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.
வரி தொடர்பான ஒரு பிரச்சினையில் Cairn Energy Plc என்ற நிறுவனத்தினால் அந்த வழக்கு வெற்றி கொள்ளப் பட்டது.
இந்நிறுவனமானது 2006-07 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஜெர்சியில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து பரிவர்த்தனைகளை மேற்கொண்டது.
இது ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள கெய்ர்ன் நிறுவனத்திற்கு மூலதன ஆதாயத்திற்கு வழிவகுத்தது.
இந்த ஆதாயமானது இந்தியாவில் வரி செலுத்தப்பட வேண்டியதாகும்.
எனவே வரியை ஏய்க்கும் நோக்கத்துடன் கெய்ர்ன் நிறுவனம் இந்தியாவிற்கு வெளியே பரிவர்த்தனையை மேற்கொண்டதாக கெய்ர்ன் நிறுவனத்தின் மீது மத்திய அரசு குற்றம் சுமத்துகின்றது.
இந்தியாவானது 104 பில்லியன் அளவில் வரியைச் செலுத்துமாறு அந்த நிறுவனத்திடம் கோரி வருகின்றது.
மேலும் இதற்கு சமமான அளவிலான அபராதத் தொகையையும் பெறப்பட்ட வட்டித் தொகையையும் கோரி வருகின்றது.