TNPSC Thervupettagam

கெளுத்தி மீன்களில் பரவக்கூடிய புற்றுநோய்

October 24 , 2026 15 hrs 0 min 16 0
  • வெர்மான்ட் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் விலங்குகளில் இயற்கையாகப் பரவக்கூடிய புற்றுநோயின் நான்காவது அறியப்பட்ட பாதிப்பைப் பதிவு செய்துள்ள நிலையில், இது மெம்ப்ரெமாகோக் ஏரியில் உள்ள பழுப்பு நிற புல்ஹெட் கெளுத்தி மீன்களில் (அமேயுரஸ் நெபுலோசஸ்) காணப்படும் மெலனோமாவைக் குறிக்கிறது.
  • ஒரு மீனில் உருவான புற்றுநோய் செல்கள் மற்ற மீன்களுக்கும் பரவி, அங்கு கட்டிகளை உருவாக்கியுள்ளதுடன் 2013 ஆம் ஆண்டு முதல் இந்த ஏரியிலிருந்து மாதிரியாக எடுக்கப்பட்ட கெளுத்தி மீன்களில் சுமார் 30% மீன்களுக்கு மெலனோமா இருந்துள்ளது.
  • கட்டி மற்றும் இயல்பான செல்களுக்கு இடையே மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ-வில் (mtDNA) உள்ள முக்கிய வேறுபாடுகளை மரபணு பகுப்பாய்வு காட்டியுள்ளது; இது வெளியிலிருந்து வந்த ஒரு மீன் மூலம் புற்றுநோய் செல்கள் பரவியதை ஆதரிக்கிறது.
  • முட்டையிடும்போது ஏற்படும் உடல் ரீதியான தொடர்பு அல்லது நீர்வாழ் சூழல் மூலம் புற்றுநோய் செல்கள் பரவக்கூடும் எனவும், அவை செவுள்கள், தோல் அல்லது வாய் வழியாகப் புதிய மீன்களுக்குள் நுழையக்கூடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • இதற்கு முன்பு நாய்கள், டாஸ்மேனியன் டெவில்கள், கிளாம்கள் மற்றும் சிப்பிகள் போன்ற இருவோட்டு மெல்லுடலிகளில் இத்தகைய பரவக்கூடிய புற்றுநோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்