TNPSC Thervupettagam

கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆணையம் நீட்டிப்பு

April 19 , 2026 2 days 66 0
  • கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் பதவிக் காலத்தை 2026 ஆம் ஆண்டு ஜூன் 10 வரை மத்திய அரசு மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது.
  • பிற மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கான பட்டியலிடப்பட்ட இனத்தவர் (SC) அந்தஸ்து குறித்து ஆராய்வதற்காக இந்த ஆணையம் 2022 ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டது.
  • இது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.
  • இந்த நீட்டிப்பானது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் ஜூன் 10 வரையிலான இரண்டு மாத காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இப்பிரச்சனை அரசியலமைப்பின் 341வது சரத்தின் கீழான, அரசியலமைப்பு (பட்டியலிடப் பட்ட சாதிகள்) ஆணை, 1950 உடன் தொடர்புடையதாகும்.
  • தற்போதைய நிலையில், பட்டியல் இனத்தவர் அந்தஸ்து இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு மட்டுமே வரையறுக்கப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்