கேட்டலோனியா அரசின் சுதந்திரப் பிரகடனம் நிராகரிப்பு
October 28 , 2017 2744 days 959 0
40 வருடங்களுக்கு பிறகான ஸ்பெயினின் தைரியம்மிக்க அரசியல் நெருக்கடியாக உருவானது கேட்டலோனியா தனிநாடு கோரிக்கை. இதன் அதிபர் தேர்வினையும், சுதந்திரப்பிரகடனத்தையும், அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே ஸ்பெயின் அரசு இதனை நிராகரித்தது.
1-அக்டோபர்-2017 அன்று கேட்டலோனியா தனது சுதந்திரபிரகடனத்தை வெளியிட்டது. இது மேட்ரிட்டினால் (ஸ்பெயினின் தலைநகரம்), சட்டப்பூர்வமற்றது என அறிவிக்கப்பட்டது.
மேலும் ஆயுதம் தாங்கிய காவல் படையும் அங்கு நிறுத்தப்பட்டது.
கேட்டலோனியா, ஸ்பெயினின் முக்கிய, வளமிகு பகுதி. ஏற்கனவே அதிக அளவு தன்னிச்சை அதிகாரங்களைப் பெற்றது ஆகும். 1939-1975 வரையிலான சர்வாதிகாரி பிரான்கோவின் தலைமையிலான காலத்தில் இதன் கலாச்சார மற்றும் அரசியல் வளர்ச்சி ஒடுக்கப்பட்டது.