TNPSC Thervupettagam

கேட்புத்திறன் பற்றிய முதலாவது உலக அறிக்கை

March 9 , 2021 1611 days 631 0
  • உலக கேட்புத்திறன் தினத்தன்று (மார்ச் 03) கேட்புத்திறன் குறித்த முதலாவது உலக அறிக்கையை உலக சுகாதார அமைப்பானது (WHO - World Health Organization) வெளியிட்டு உள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நான்கு நபர்களில் ஒருவர் 2050 ஆம் ஆண்டிற்குள் லேசானது முதல் கடுமையானது வரை கேட்புத்திறன் இழப்பைச் சந்திப்பார் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
  • இது உலகம் முழுவதும் சுமார் 2.5 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளது.

இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

  • இந்த அறிக்கையின் படி, குறைந்தது 700 மில்லியன் மக்கள் காது கேட்புத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள், எனவே  அவர்களுக்கு காது மற்றும் செவிப்புலன் பராமரிப்புச் சாதனம் தேவைப்படும்.
  • 12-35 வயதிற்குட்பட்ட பில்லியன் கணக்கிலான இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு அமைப்புகளினால் ஏற்படும் ஒலி மாசுபாடு காரணமாக கேட்புத்திறன் குறைபாடு ஏற்படும் என்று இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகின்றது.
  • குழந்தைகளில் 60 சதவீத கேட்புத்திறன் குறைபாடானது தடுக்கக் கூடிய காரணங்களால் ஏற்படுகின்றது என்று WHO கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்