TNPSC Thervupettagam

கேத் பச்சாவோ அபியான் திட்டம்

June 7 , 2026 7 days 110 0
  • மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், 'கேத் பச்சாவோ அபியான்' என்ற நாடு தழுவிய திட்டத்தை 2026 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று மத்தியப் பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் தொடங்கியது.
  • மண் வளம் மற்றும் நிலையான வேளாண்மையை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சாரம் மேற் கொள்ளப் படும்.
  • ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டைக் குறைப்பதிலும், அறிவியல் பூர்வமான விவசாய முறைகளை ஊக்குவிப்பதிலும் இது கவனம் செலுத்துகிறது.
  • இந்த இயக்கம் மண் வள அட்டைகள் (SHC), மண் பரிசோதனை, சமச்சீர் ஊட்டச்சத்து மேலாண்மை, இயற்கை விவசாயம் மற்றும் நீர் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
  • பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN), கிசான் கடன் அட்டை (KCC), பயிர்க் காப்பீடு மற்றும் பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டங்கள் போன்ற திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை இது ஏற்படுத்துகிறது.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் கிருஷி விஞ்ஞான் கேந்திரா (KVK) அறிவியலாளர்கள் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்குவார்கள்.
  • "மண்ணைக் காப்போம், விவசாயத்தைக் காப்போம், விவசாயிகளைக் காப்போம்" என்ற கருத்துருவின் அடிப்படையில் இந்தப் பிரச்சாரம் அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்