கேரள உயர்நீதிமன்றம் காரத் ரசாக் என்ற சட்டமன்ற உறுப்பினரை தகுதி நீக்கம் செய்தது
January 19 , 2019 2400 days 721 0
கேரளாவின் உயர்நீதிமன்றம் கொடுவாலி சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சுயேச்சை சட்டமன்ற உறப்பினரான காரத் ரசாக்கை தகுதி நீக்கம் செய்திருக்கின்றது.
இவர் 2016 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்களின் போது எதிரணி வேட்பாளருக்கு எதிராக இவர் மேற்கொண்ட அவதூறுப் பிரச்சாரத்திற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்தத் தகுதி நீக்கமானது 1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டதாகும்.