கேரளம் பெயர் மாற்றம் மீதான மாநில சட்டசபையின் தீர்மானம்
August 15 , 2023 865 days 649 0
கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளா’ என்பதில் இருந்து ‘கேரளம்’ என மாற்றுவதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் கேரளச் சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
மலையாள மொழியில், இந்த மாநிலம் 'கேரளம்' என்று குறிக்கப்படுகிறது, ஆனால் மற்ற மொழிகளில், இது 'கேரளா' என்று அழைக்கப் படுகிறது.
‘கேரளம்’ என்றச் சொல்லானது தென்னையைக் குறிக்கும் “கேரா,” மற்றும் நிலத்தைக் குறிக்கின்ற “ஆலம்” ஆகிய இரண்டு மலையாளச் சொற்களின் மீதான இணைப்பினைக் குறிக்கிறது.
இவ்வாறு, ‘கேரளம்’ என்ற சொல் “தென்னை மர தேசம்” என்பதன் சாராம்சத்தை நுணுக்கமாக உள்ளடக்கியுள்ளது.
இது இந்தியாவின் ஒட்டு மொத்தத் தேங்காய் சாகுபடியில் சுமார் 45% பங்களிப்பினைக் கொண்டுள்ளது.
முதல் அட்டவணையில் அதன் பெயரை மாற்றுவதற்கு அரசியலமைப்பின் 3வது சட்டப் பிரிவின் விதிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்தப் பெயர் மாற்றத்தின் மூலம், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப் பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் ‘கேரளம்’ என்ற சொல்லானது அந்த மாநிலத்தின் அதிகாரப் பூர்வப் பெயராக ஏற்றுக் கொள்ளப் படும்.