குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு (Citizenship Amendment Act - CAA) எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வதற்காக 131வது சரத்தை கேரள மாநில அரசு பயன்படுத்தியுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் சரத்து 14, சரத்து 21 மற்றும் சரத்து 25 ஆகியவற்றை மீறுவதாகக் கூறி CAA ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடிய முதலாவது மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.
சரத்து 131 ஆனது அசல் அதிகார வரம்பு என அழைக்கப் படுகின்றது. இந்தச் சரத்தின் கீழ், மாநிலங்களுக்கிடையில் அல்லது மத்திய அரசிற்கும் மாநிலத்திற்கும் இடையில் எழும் எந்தவொரு பிரச்சினைகளைக் களைவதிலும் உச்ச நீதிமன்றத்திற்கு அசல் அதிகார வரம்பு உள்ளது.
இந்தச் சரத்தானது கீழ் நீதிமன்றத்தின் மூலமாக அல்லது கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்குப் பதிலாக இது போன்ற வழக்குகளை நேரடியாக எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தை அனுமதிக்கின்றது.
CAA சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றம் இந்த மனுக்களை தனித்தனியாக விசாரிக்கலாம் அல்லது அவற்றை ஒன்றாக இணைக்கலாம். ஆனால் கேரள அரசாங்கத்தின் மனுவை மட்டும் அந்த மனுக்களுடன் இணைக்க முடியாது.