TNPSC Thervupettagam

கேரளாவின் இரண்டாவது உள்நாட்டு மாட்டு இனம்

August 27 , 2026 16 hrs 0 min 3 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் தேசிய விலங்கு மரபணு வளப் பணியகம் (ICAR-NBAGR), பெரியார் குள்ளன் என்றும் அழைக்கப்படும் பெரியார் மாட்டை ஒரு உள்நாட்டு மாட்டு இனமாக அதிகாரப் பூர்வமாகப் பதிவு செய்துள்ளது.
  • வெச்சூர் மாடு இந்தியாவின் மிகச்சிறிய மாட்டு இனங்களில் ஒன்றாகும் என்பதோடு மேலும் இது கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டது.
  • வெச்சூர் மாட்டுக்கு அடுத்தபடியாக தேசிய அங்கீகாரம் பெற்ற கேரளாவின் இரண்டாவது உள்நாட்டு மாட்டு இனம் பெரியார் மாட்டு இனமாகும்.
  • பெரியார் குள்ளன் என்பது மத்திய கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதிகள் மற்றும் தோட்டப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குள்ள மாட்டு இனமாகும்.
  • இது முக்கியமாக எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் காணப்படுகிறது என்பதோடு மேலும் உள்ளூரில் இது குட்டம்புழா மாடு மற்றும் அண்டுகண்ணி என்று அழைக்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்