TNPSC Thervupettagam

கேரளாவின் நகர்ப்புறக் கொள்கை மாதிரி

September 15 , 2025 7 days 27 0
  • கேரளா 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கேரள நகர்ப்புறக் கொள்கை ஆணையம் (KUPC) எனப்படும் இந்தியாவின் முதல் மாநில அளவிலான நகர்ப்புறக் கொள்கை அமைப்பை நிறுவியது.
  • கேரளாவின் புவியியல், பருவநிலை மற்றும் குடியேற்ற வடிவங்களின் அடிப்படையில் 25 ஆண்டு கால நகர்ப்புற செயல் திட்டத்தினைத் தயாரிக்கும் பணியை KUPC மேற்கொண்டது.
  • 2050 ஆம் ஆண்டிற்குள், கேரளாவின் நகர்ப்புற மக்கள் தொகை தேசிய சராசரியை விட மிக அதிகமாக, 80 சதவீதத்தை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • திருச்சூர்-கொச்சி நிதி சார் தொழில்நுட்ப மையமாகவும், திருவனந்தபுரம்-கொல்லம் கல்வி சார் வழித்தடமாகவும் எனப் பொருளாதார மண்டலங்கள் அடையாளம் காணப் பட்டன.
  • கோழிக்கோடு இலக்கிய நகரமாகவும், பாலக்காடு மற்றும் காசர்கோடு சீர்மிகு தொழில்துறை வளர்ச்சி மையங்களாகவும் குறிக்கப்பட்டன.
  • ஈரநிலங்களை மீட்டெடுப்பது, நீர்வழிகளை மீண்டும் செயல்படுத்துவது மற்றும் நகர்ப்புறத் திட்டமிடலின் கீழ் பாரம்பரியப் பகுதிகளைப் பாதுகாப்பது குறித்து இந்த அறிக்கை அறிவுறுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்