TNPSC Thervupettagam

கேரளாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் திடக்கழிவு இடமாற்றல்

May 1 , 2024 16 days 102 0
  • மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆனது, கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு சட்ட விரோதமான முறையில் மாநிலங்களுக்கு இடையேயான திடக்கழிவுகளைக் கொண்டு வருவதைத் தடுப்பதற்கான ஒரு செயல் திட்டத்தை வகுத்துள்ளது.
  • கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகளைச் சட்டவிரோதமாக ஆனைமலை அருகே கொட்டுவதற்கு எதிராக தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வரும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வின் ஒரு உத்தரவின் பேரில் இந்த செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
  • வீடுகளில் இருந்து உருவாக்கப்படும் உயிரி மருத்துவக் கழிவுகள் ஆனது, 2016 ஆம் ஆண்டு உயிரியல் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளுக்கு எதிராக தவறான முறையில் மேலாண்மை செய்யப் படுவதை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்டறிந்தது.
  • அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் தங்கள் அதிகார வரம்பில் உள்ள கழிவு மேலாண்மை அமைப்பின் விரிவான பட்டியலைத் தயாரிப்பதை உறுதி செய்யுமாறு கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோரப்பட்டுள்ளது.
  • திடக்கழிவு மேலாண்மைத் திறனை வலுப்படுத்துவதற்காக வேண்டி, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆனது, திடக்கழிவு மேலாண்மையில் உள்ள குறிப்பாக மறு சுழற்சி செய்ய முடியாத கழிவுகள் தொடர்பாக உள்ள இடைவெளிகளைக் கண்டு அறியுமாறு, கேரளாவின் சுசித்வா திட்ட அமைப்பிற்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்