மாதிரிப் பதிவுக் கணக்கெடுப்பின் (SRS) படி, 2023 ஆம் ஆண்டில் கேரளாவின் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் (IMR) 1,000 பிறப்புகளுக்கு 5 ஆகக் குறைந்துள்ளது.
இந்த IMR 25 என்ற தேசிய சராசரியை விட ஐந்து மடங்கு குறைவாகவும், அமெரிக்காவின் 5.6 IMR அளவினை விடவும் குறைவாகவும் இருந்தது.
கேரளா இந்தியாவில் ஒற்றை இலக்க IMR கொண்ட மற்றும் குழந்தை இறப்பில் நகர்ப்புற-கிராமப்புற வேறுபாடு இல்லாத ஒரே மாநிலமாக இருந்தது.
கேரளா முதன்முதலில் 2018 ஆம் ஆண்டில் ஒற்றை இலக்க IMR அளவினை அடைந்தது என்பதோடு 2019 ஆம் ஆண்டில் அது 6 ஆகவும் 2023 ஆம் ஆண்டில் 5 ஆகவும் குறைந்தது.
கேரளாவில் முன்னதாக ஆண்டுதோறும் சுமார் 5–5.5 லட்சம் பிறப்புகள் பதிவானது, ஆனால் 2023 ஆம் ஆண்டில் 3,93,231 பிறப்புகள் மட்டுமே பதிவானது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பதிவாகும் பிறப்புகளின் எண்ணிக்கை தோராயமாக 3.54 லட்சமாகக் குறையும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
கேரளாவில் 2021–22 ஆம் ஆண்டினைத் தவிர, ஆண்டுதோறும் சராசரியாக 120–140 என்ற பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் பதிவானது.
SRS புள்ளி விவரங்களின் அடிப்படையில், மிகக் குறைந்த MMR கொண்ட இந்திய மாநிலங்களில் கேரளா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகியவை முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டன.