TNPSC Thervupettagam

கேரளாவில் விண்மீன் தவளைகள்

January 7 , 2026 2 days 54 0
  • கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உலகின் அரிதான விண்மீன் தவளைகளில் ஏழு (மெலனோபாட்ராக்கஸ் இண்டிகஸ்) மறைந்து விட்டன, அதாவது இறந்து விட்டதாகக் கருதப் படுகிறது.
  • இந்தத் தவளைகள் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் சிறிய நீர்நில வாழ் இனங்கள் ஆகும்.
  • ஆராய்ச்சியாளர்கள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சிதைந்த மரக்கட்டைகளின் கீழ் ஏழு தவளைகளைக் கண்டுபிடித்தனர்.
  • 2020 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் காலகட்டத்திற்கு இடையில், புகைப்படக் கலைஞர்கள் மரக்கட்டைகளை கவிழ்த்து, அதிக ஒளிர்வு மிக்க வெட்டொளிகளைப் பயன்படுத்தி அவற்றின் வாழ்விடத்தை இடையூறு செய்தனர்.
  • 2021–2022 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் திரும்பி வந்த போது, ​​ஏழு தவளைகளும் மறைந்து விட்டன.
  • இந்த இனம் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தால் (IUCN) எளிதில் பாதிக்கப் படக்கூடியதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது என்பதோடு வாழ்விட இழப்பு, நிலச்சரிவுகள் மற்றும் புகைப்படச் சுற்றுலாவால் இது அச்சுறுத்தப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்