TNPSC Thervupettagam

கேர்எட்ஜ் மாநிலங்கள் தரவரிசை 2025

May 8 , 2025 17 hrs 0 min 33 0
  • 2025 ஆம் ஆண்டு கேர்எட்ஜ் மாநில மதிப்பீடுகள் என்ற தரவரிசையில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக உருவெடுத்துள்ளன.
  • மேற்கு (மகாராஷ்டிரா, குஜராத்) மற்றும் தென் மாநிலங்கள் (கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு) முதல் ஐந்து இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
  • வடகிழக்கு, மலைப்பாங்கான மற்றும் சிறிய மாநிலங்களை உள்ளடக்கிய B குழுவில், 62.1 மதிப்பெண்களுடன் கோவா முதலிடத்தைப் பிடித்தது.
  • இந்த வருடாந்திர அறிக்கையின் மீதான இரண்டாவது பதிப்பானது, பொருளாதாரம், நிதியியல், உள்கட்டமைப்பு, நிதி மேம்பாடு, சமூகம், நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற ஏழு முக்கியத் தூண்கள் வாரியாக சுமார் 50 செயல்திறன் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி இந்திய மாநிலங்களை மதிப்பிடுகிறது.
  • ஆந்திரப் பிரதேசம் நிர்வாகப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
  • குறைவான வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட கடன் அளவுகளைக் கொண்ட நிதியியல் பிரிவில் ஒடிசா முதலிடத்தில் உள்ளது.
  • பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்கட்டமைப்பில் முன்னணியில் உள்ளன என்பதோடு  கேரளா சமூகக் குறிகாட்டிகளில் சிறப்பான செயல் திறனைக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு சிறப்பானச் செயல் திறனுடன் முக்கியச் சமூக அளவீடுகளில் நிலையான முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது.
  • தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் வங்கிக் கடன் வழங்கீடு மற்றும் சுய உதவிக் குழு (SHG) கடன் வழங்கீட்டில் சில நேர்மறையான விளைவுகளைக் கொண்டுள்ளன.
  • சுற்றுச்சூழல் தரவரிசையில், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகியவை முதலிடத்தில் உள்ளன.
  • பீகார் (17வது இடம்), ஜார்க்கண்ட் (16வது இடம்), மற்றும் மத்தியப் பிரதேசம் (15வது இடம்) ஆகியவை தரவரிசையின் கடைசி இடங்களில் உள்ள பெரிய மாநிலங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்