கேலோ இந்தியா ASMITA கால்பந்து லீக் 2025-26 ஆனது இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தினால் மகாராஷ்டிராவின் ஜல்கானில் தொடங்கப் பட்டது.
இந்த முன்னெடுப்பானது, 13 வயதுக்குட்பட்ட பெண்களிடையே பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதன் மூலமும் திறமையை அடையாளம் காண்பதன் மூலமும் விளையாட்டுகளில் உறுதியான நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.
பழங்குடியின மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த வீரர்களை விளையாட்டில் சேர்ப்பதை இந்த லீக் நோக்கமாகக் கொண்டுள்ளதோடு மேலும் தொடக்க நிலை மற்றும் திறமையான விளையாட்டு வீரர்கள் ஆகிய இருவருக்குமான ஒரு தளத்தை வழங்குகிறது.
விளையாட்டு மூலம் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்கான 'சப்கா சாத் சப்கா விகாஸ்' என்ற அரசாங்கத்தின் தொலைநோக்கு கொள்கையுடன் இந்த நிகழ்வு ஒத்துப் போகிறது.