January 19 , 2026
15 hrs 0 min
59
- 2026 ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டியின் (KIBG) ஒட்டுமொத்த சாம்பியனாக கர்நாடகா உருவெடுத்துள்ளது.
- இது தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூவின் ஒன்றியப் பிரதேசமான டையூவின் கோக்லா கடற்கரையில் நடைபெற்றது.
- இந்த விளையாட்டுப் போட்டிகளின் உருவச் சின்னம் 'பியர்ல்' என்ற ஒரு துடிப்பான டால்பின் ஆகும்.
- கர்நாடகா 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் இருந்தது.
- தமிழ்நாடு 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் 2வது இடத்தைப் பிடித்தது.
- மணிப்பூர் 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் 3வது இடத்தைப் பிடித்தது.
- அஷ்மிதா சந்திரா மற்றும் துருபத் ராமகிருஷ்ணா தங்கம் வென்றதன் மூலம் கர்நாடகா திறந்த நிலை நீச்சலில் முன்னிலை பெற்றது.
- செபக் தக்ராவில், மணிப்பூர் மகளிர் அணி தங்கத்தையும், தமிழ்நாடு ஆடவர் அணி தங்கத்தையும் வென்றது.
- பென்காக் சிலாட் போட்டியில் மத்தியப் பிரதேசம் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றது.
Post Views:
59