கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் 2025
January 29 , 2025 157 days 291 0
ஐந்தாவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் (KIWG-2025) ஆனது லடாக்கின் லே நகரில் நிறைவடைந்தது.
இதன் முதல் கட்டப் போட்டிகளானது ஜனவரி 23 முதல் 27 ஆம் தேதி வரை லடாக்கில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஆனது பிப்ரவரி 21 முதல் 25 ஆம் தேதி வரை ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெற உள்ளன.
தற்போது, இந்தப் போட்டியில் லடாக் நான்கு தங்கங்கள், இரண்டு வெள்ளிகள் மற்றும் ஒரு வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
தமிழ்நாடு மூன்று தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.