முதல் முறையாக நடைபெறும் கேலோ இந்தியா நீர் விளையாட்டுப் போட்டிகள் ஆனது (KIWSF) ஸ்ரீநகரின் தால் ஏரியில் நடைபெற உள்ளன.
சாகசம், ஆற்றல் மற்றும் காஷ்மீரின் உணர்வைக் குறிக்கும் வகையில் இமயமலை மீன்கொத்திப் பறவை அப்போட்டிகளின் உருவச் சின்னமாக அறிமுகப் படுத்தப் பட்டது.
KIWSF போட்டிகளில் நீர்ச் சறுக்கல், டிராகன் படகுப் பந்தயம் மற்றும் ஷிகாரா பந்தயம் போன்ற செயல் விளக்கப் போட்டி நிகழ்வுகளுடன் படகோட்டுதல், கேனோயிங் மற்றும் கயாக்கிங் போன்ற சிறு படகோட்டுதல் ஆகியவற்றில் பதக்கங்களுக்கான போட்டி நிகழ்வுகளும் அடங்கும்.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் குல்மார்க் நகரில் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளுக்கான (KIWG) பனிச் சூழல்சார் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டதற்கு பிறகு, ஜம்மு & காஷ்மீரில் நடைபெறும் இரண்டாவது கேலோ இந்தியா போட்டி இதுவாகும்.