இந்த விளையாட்டின் இரண்டாவது பதிப்பு மார்ச் 2022 முதல் பெங்களூரில் நடைபெறும்.
இதன் முதல் பதிப்பு 2020 ஆம் ஆண்டில் ஒடிசாவில் நடத்தப் பட்டது.
இது இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் அளவிலான மட்டத்தில் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியாகும்.
இதை இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்கின்றன.
இது 2018 ஆம் ஆண்டில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியானது வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்ட பின்னர் தொடங்கப்பட்டது.
அந்த விளையாட்டுகள் அதன் மூன்றாவது பதிப்பை 2020 ஆம் ஆண்டில் முடித்தன.
அதன் நான்காவது பதிப்பு 2021 ஆம் ஆண்டில் ஹரியானாவில் நடத்தப் பெறும்.