TNPSC Thervupettagam

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் 2025

October 24 , 2025 12 days 63 0
  • 5வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளானது (KIUG) ராஜஸ்தானில் நடைபெற உள்ளன.
  • இந்த விளையாட்டுப் போட்டிகள் இராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர், அஜ்மீர், உதய்பூர், ஜோத்பூர், பிகானர், கோட்டா மற்றும் பரத்பூர் ஆகிய ஏழு நகரங்களில் நடைபெற உள்ளன.
  • மொத்தம் 23 பதக்க விளையாட்டுகள் மற்றும் ஒரு செயல்விளக்க விளையாட்டுப் போட்டிகள், கோ-கோ ஆகியவை இதில் இடம் பெறும்.
  • இந்த ஆண்டு சேர்க்கப்பட்ட புதிய துறைகளில் கடற்கரை கைப்பந்துப் போட்டி, படகோட்டம் மற்றும் துடுப்பு படகோட்டம்/கயாக்கிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை அடங்கும்.
  • பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு வீரர்களை உயர் மட்டப் போட்டிகளுடன் இணைக்கும் ஒரு தேசிய தளமாக KIUG செயல்படுகிறது.
  • முந்தையப் போட்டியானது வடகிழக்கு இந்தியாவில் நடைபெற்றது என்பதோடு, இதில் சண்டிகர் பல்கலைக்கழகம் ஒட்டு மொத்த வெற்றியாளர் பட்டத்தை வென்றது.
  • கேலோ இந்தியா என்பது இந்திய அரசின் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஒரு முதன்மைத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்