கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் 2025
December 10 , 2025 21 days 111 0
5வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளானது (KIUG 2025) இராஜஸ்தானில் உள்ள ஏழு நகரங்களில் நடைபெற்றது.
இதில் சண்டிகர் பல்கலைக்கழகம் 67 பதக்கங்களுடன் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து லவ்லி புரொஃபஷனல் பல்கலைக் கழகம் (78 பதக்கங்கள்) மற்றும் குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் (72 பதக்கங்கள்) இரண்டாவதாகவும் இடம் பெற்றன.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஸ்ரீஹரி நடராஜ், உயரம் தாண்டுதல் வீராங்கனை பூஜா சிங், வில்வித்தை வீராங்கனை அதிதி சுவாமி, மல்யுத்த வீராங்கனை மான்சி லாதர் மற்றும் துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆஷி சௌக்ஸி ஆகியோர் சிறந்த விளையாட்டு வீரர்கள் பட்டத்தினை வென்றனர்.
இந்த விளையாட்டுப் போட்டிகள், இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டன.