கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் 2025
October 24 , 2025 68 days 175 0
5வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளானது (KIUG) ராஜஸ்தானில் நடைபெற உள்ளன.
இந்த விளையாட்டுப் போட்டிகள் இராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர், அஜ்மீர், உதய்பூர், ஜோத்பூர், பிகானர், கோட்டா மற்றும் பரத்பூர் ஆகிய ஏழு நகரங்களில் நடைபெற உள்ளன.
மொத்தம் 23 பதக்க விளையாட்டுகள் மற்றும் ஒரு செயல்விளக்க விளையாட்டுப் போட்டிகள், கோ-கோ ஆகியவை இதில் இடம் பெறும்.
இந்த ஆண்டு சேர்க்கப்பட்ட புதிய துறைகளில் கடற்கரை கைப்பந்துப் போட்டி, படகோட்டம் மற்றும் துடுப்பு படகோட்டம்/கயாக்கிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை அடங்கும்.
பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு வீரர்களை உயர் மட்டப் போட்டிகளுடன் இணைக்கும் ஒரு தேசிய தளமாக KIUG செயல்படுகிறது.
முந்தையப் போட்டியானது வடகிழக்கு இந்தியாவில் நடைபெற்றது என்பதோடு, இதில் சண்டிகர் பல்கலைக்கழகம் ஒட்டு மொத்த வெற்றியாளர் பட்டத்தை வென்றது.
கேலோ இந்தியா என்பது இந்திய அரசின் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஒரு முதன்மைத் திட்டமாகும்.